தொழிலக பாதுகாப்பு இயக்குநர் அலுவலகங்களில் சோதனை; ரூ.9.05 லட்சம் பறிமுதல்

தொழிலக பாதுகாப்பு இயக்குநர் அலுவலகங்களில் சோதனை; ரூ.9.05 லட்சம் பறிமுதல்

ஈரோடு மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குநர் அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில்
கணக்கில் வராத 9 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொழிலக பாதுகாப்பு இயக்குநர் அலுவலகங்களில் சோதனை; ரூ.9.05 லட்சம் பறிமுதல்

ஈரோடு எஸ்.கே.சி சாலையில் மாவட்ட தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் தொழிற்சாலைகள் துணை மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிகாரிகள் அதிகளவு நன்கொடை கேட்பதாக, தொழிற்சாலை உரிமையாளர்கள் சிலர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தனர்.

தொழிலக பாதுகாப்பு இயக்குநர் அலுவலகங்களில் சோதனை; ரூ.9.05 லட்சம் பறிமுதல்

அதன்பேரில் நேற்று இரவு தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், கணக்கில் வராத 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்ட நன்கொடை குறித்த விபரம் அடங்கிய டைரி மற்றும் பரிசு பொருட்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக. ஆய்வாளர் வேல்முருகன், துணை இயக்குனர் சந்திரமோகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

தொழிலக பாதுகாப்பு இயக்குநர் அலுவலகங்களில் சோதனை; ரூ.9.05 லட்சம் பறிமுதல்

இதேபோல் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள தொழிலக பாதுகாப்புத்துறை துணை மற்றும் இணை இயக்குனர் அலுவலகங்களிலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிகாரிகளுக்கு, தனியார் தொழிற்சாலை தரப்பினர் அன்பளிப்பு வழங்குவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, நேற்று மாலை கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜா மெல்வின்சிங் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரு அலுவலகங்களிலும் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.