கிண்ணிமங்கலத்தில் கிடைத்த கல்வெட்டு நீத்தோர் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் – தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அறிக்கை

கிண்ணிமங்கலத்தில் கிடைத்த கல்வெட்டு நீத்தோர் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் – தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அறிக்கை

மதுரை:
மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலம் கிராமத்தில் சில வாரங்களுக்கு முன் கிடைத்த தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் வட்டெடுத்து கல்வெட்டு ஒன்றும் கிடைத்தது. இக்கல்வெட்டுகளை முனைவர் இரா.சிவானந்தம் தலைமையில் முனைவர் சொ. சாந்தலிங்கம். முனைவர் பொ. இராசேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கிண்ணிமங்கலத்தில் கிடைத்த கல்வெட்டு நீத்தோர் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் – தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அறிக்கை

முதற்கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கிண்ணிமங்கலம் கோவில் வளாகத்தில் கிடைத்த தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட தூணானது நீத்தோர் நினைவாக எழுப்பபட்ட நினைவுத்தூண் என தெரிவித்துள்ளனர்.

“எகன் ஆதன் கோட்டம்” என்று வாக்கியத்தின் எழுத்தமைதியை ஆராய்ந்ததில் இக்கல்வெட்டின் காலம் கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1ஆம் நூற்றாண்டு ஆக இருக்கும் என்ற ஆய்வாளர்களின் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது.

கிண்ணிமங்கலத்தில் கிடைத்த கல்வெட்டு நீத்தோர் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண் – தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அறிக்கை

இக்கல்வெட்டுக்கு வலு சேர்க்கும் புதிய ஆதாரங்கள் எதிர்காலத்தில் கிடைக்கும் வரை இக்கல்வெட்டு நீத்தோர் நினைவாக எழுப்பபட்ட நினைவுத்தூணாக கருதப்படும் என்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.