மாலத் தீவிலிருந்து 700 இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்த ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல்

 

மாலத் தீவிலிருந்து 700 இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்த ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல்

டெல்லி: இந்திய கடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ் ஜலாஷ்வா மாலத் தீவிலிருந்து 700 மீட்டு வந்தது.

இந்திய கடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ் ஜலாஷ்வா மாலத்தீவு துறைமுகத்திலிருந்து சுமார் 700 இந்தியர்களை இன்று மீட்டுக் கொண்டு வந்தது. கொரோனா பரவலால் உலகம் முழுக்க பயணக் கட்டுப்பாடுகள் இருப்பதால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் ‘சமுத்ரா சேது’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மீட்புப் பணி செய்யப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல் மாலத்தீவுக்கு பயணிப்பது இது மூன்றாவது முறையாகும்.

இதற்கு முன்பு  மே 8 மற்றும் மே 16 ஆகிய தேதிகளில் இரண்டு முறை மாலத்தீவில் இருந்து 1,286 இந்தியர்களை இந்தக் கப்பல் மீட்டு வந்தது. கடந்த ஜூன் 1 ம் தேதி இலங்கையின் கொழும்பிலிருந்து தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கு சுமார் 700 இந்தியர்களை இந்த கப்பல் மீட்டு வந்தது. தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தக் கப்பல் அடுத்து ஈரான் நாட்டின் பந்தர் அப்பாஸில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்கு செல்ல உள்ளது.