சூரப்பா மீதான விசாரணை – மேலும் 10 நாள் அவகாசம்!!

 

சூரப்பா மீதான விசாரணை – மேலும் 10 நாள் அவகாசம்!!

சூரப்பா மீதான ஊழல் புகாரை விசாரிக்கும் கலையரசன் குழுவிற்கு கூடுதலாக 0 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சூரப்பா மீதான விசாரணை – மேலும் 10 நாள் அவகாசம்!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து தமிழக அரசு கலையரசன் குழு என்ற விசாரணை கமிஷனை நியமித்து விசாரித்து வருகிறது. சூரப்பா மீதான புகார்களில் முகாந்திரம் உள்ளது என கலையரசன் குழு தகவல் தெரிவித்தது. இதுகுறித்து சூரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பி அவரிடமும் விளக்கம் பெறப்பட்டு விட்டது.ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சூரப்பாவுக்கு எதிரான இந்த நடவடிக்கை நியாயமற்றது அதனால் விசாரணையை முடித்துக் கொள்ளுமாறு முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் தற்போதைய திமுக அரசு இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை.

சூரப்பா மீதான விசாரணை – மேலும் 10 நாள் அவகாசம்!!

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை குழுவுக்கு மேலும் 10 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு எழுதிய கடிதத்திற்கு உயர்கல்வித் துறை ஒப்புதல் அளித்துள்ளது. சூரப்பா மீதான புகாரில் இறுதிகட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டி இருப்பதால் கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது. சூரப்பா, பல்கலைக்கழக அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரிடமும் விசாரணை முடிந்து உள்ளது.