ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி! முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் அமைச்சர்!

 

ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி! முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் அமைச்சர்!

முதல்வரின் ஒப்புதலைப்பெற்று ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி ஆன்லைன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் விளாங்கோம்பை மலைவாழ் மக்கள்
கிராமத்தில் வனத்துறையினரால் நடத்தப்படும் பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசப்பகவுண்டன்புதூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி! முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் அமைச்சர்!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் ஊராட்சி மன்ற கட்டிடகட்டுமானப் பணிக்கு பூமி பூஜை அதே ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் விவசாய பயிர்கடன் சிறுவணிக
கடனுதவிகளையும் கொங்கர்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் விளாங்கோம்பை மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டாவும், வீடுகள் கட்டுவதற்கு பசுமை வீடுகள் திட்டத்தில் ஆணையும் நலத்திட்ட உதவிளையும் வழங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் தாசப்பகவுண்டன்புதூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கிளையை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் திறந்துவைத்து அப்பகுதியில் உள்ள 101 பயனாளிகளுக்கு ஒரு கோடி மதிப்பிலான கடனுதவிகள்
மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

ஆன்லைன் மூலம் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி! முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் அமைச்சர்!

மேலும் 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான நிதியியல் கல்வி விழிப்புணர்வு முகாமையும் தொடங்கிவைத்தனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், விளாங்கோம்பை மலை வாழ்மக்கள் கிராமத்தில் வனத்துறையின் மூலமாக பள்ளி திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விளாங்கோம்பை காற்றாற்று பள்ளத்தை மேம்படுத்த வேண்டுமெனில் மக்கள் தொகையின் அடிப்படையில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் புத்தாக்கப்பயிற்சி ஆன்லைன் மூலம் நடத்த முதல்வரின் ஒப்புதல் பெற்ற பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியிர் கதிரவன் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜாகிருஷ்ணன் ஈஸ்வரன் சிவசுப்பிரமணியம் கோட்டாட்சியர் ஜெயராமன் கூட்டுறவு சங்கத்தின் இணை பதிவாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.