சிறையில் கைதி தற்கொலை – விசாரணை கோரி ஆட்சியரிடம் மனு

சிறையில் கைதி தற்கொலை – விசாரணை கோரி ஆட்சியரிடம் மனு

கோவை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக் கோரி கோவை மாவட்ட
ஆட்சியரிடம், உறவினர்கள் மனு அளித்தனர்.

சிறையில் கைதி தற்கொலை – விசாரணை கோரி ஆட்சியரிடம் மனு

கொடைக்கானல் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்ராஜா (32). இவருக்கு ஷீபா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் மகள் பிரிந்துசென்ற நிலையில், மகனை தனது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, திருப்பூரில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

சிறையில் கைதி தற்கொலை – விசாரணை கோரி ஆட்சியரிடம் மனு

இந்நிலையில், சுரேஷ் ராஜா கடந்த ஜூன் மாதம் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதம் ஜாமீனில் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை ஜாமீன் நிறைவடைந்த அன்றைய தினத்திலேயே வேறொரு திருட்டு வழக்கில் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று சிறையில் சுரேஷ்ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

சிறையில் கைதி தற்கொலை – விசாரணை கோரி ஆட்சியரிடம் மனு

இதுகுறித்து சிறை துறையினர் சுரேஷ் ராஜாவின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் சுரேஷ்ராஜாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். அந்த மனுவில், சிறையில் சுரேஷ்ராஜா அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், சிறைத்துறையினர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளிப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

சிறையில் கைதி தற்கொலை – விசாரணை கோரி ஆட்சியரிடம் மனு