ஹத்ராஸ் சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீது மை வீச்சு.. சமாஜ்வாடி கட்சி கண்டனம்

 

ஹத்ராஸ் சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீது மை வீச்சு.. சமாஜ்வாடி கட்சி கண்டனம்

ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீது வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு சமாஜ்வாடி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரத்து ஆளாகி பலியான 19 வயது தலித் பெண்ணின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அது போன்று ஆம் ஆத்மியின் மாநிலங்களை உறுப்பினர் சஞ்சய் சிங்கும் ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்தார். அதன்பிறகு பத்திரிகையாளர்களுக்கு சஞ்சய் சிங் பேட்டியளித்த போது அவர் மீது ஒருவர் மை வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்வத்துக்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஹத்ராஸ் சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீது மை வீச்சு.. சமாஜ்வாடி கட்சி கண்டனம்
மை வீசப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்

சமாஜ்வாடி கட்சி இது தொடர்பாக டிவிட்டரில், ஹத்ராஸ் கிராமத்தில் பாலியல் பலாத்காரத்தால் பலியானவரின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் மீது மை வீசிய சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சி தலைவர்களின் குரலை அடக்க அரசாங்கத்தால் முடியாது. மகளுக்கு (பாதிக்கப்பட்ட) நீதி வழங்கும் என பதிவு செய்து இருந்தது.

ஹத்ராஸ் சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீது மை வீச்சு.. சமாஜ்வாடி கட்சி கண்டனம்
சமாஜ்வாடி

டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் இது குறித்து கூறுகையில், சஞ்சய் சிங், மாநில அரசின் அநீதி மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக அச்சமின்றி குரல் கொடுக்கிறார் என தெரிவித்தார். ஆம் ஆத்மியின் மற்றொரு தலைவர் ராவ் சாதா இந்த சம்பவத்தை உத்தர பிரதேச அரசின் கோழைத்தனம் என்று குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், செய்தியாளர்களின் சந்திப்பின்போது சஞ்சய் சிங் மீது மை வீசப்பட்டது. மை வீசிய நபரை உடனடியாக கைது செய்யப்பட்டார், தேவையான சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.