ராமர் கோவில் கட்டும் பணி தொடங்குவது எப்போது? – ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இன்று கூடி முடிவு

 

ராமர் கோவில் கட்டும் பணி தொடங்குவது எப்போது? – ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இன்று கூடி முடிவு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி எப்போது தொடங்குவது என்று ஶ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இன்று கூடி முடிவு செய்ய உள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடந்து முடிந்துவிட்டாலும், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து தடைபட்டுக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கட்டுமான பணி தொடக்கத்தை பிரதமர் மோடியை அழைத்து மேற்கொள்ள கட்டுமானத்தை மேற்கொள்ளும் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டும் பணி தொடக்க விழாவில் பங்கேற்க வேண்டும் என்று ஶ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிர்திய கோபால் தாஸ் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

ராமர் கோவில் கட்டும் பணி தொடங்குவது எப்போது? – ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை இன்று கூடி முடிவு
ஆனால், எப்போது பணியைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்படவில்லை. ராமஜென்ம பூமி அறக்கட்டளைகள் இன்று கூடி கட்டுமானப் பணி தொடங்குவது எப்போது என்று முடிவு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அநேகமாக அடுத்த மாதம் கட்டுமானப் பணி தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் கட்டுமானப் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அந்த பணி நிறுத்தப்பட்டது. பின்னர் மே மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் அப்போதும் மேற்கொள்ள முடியவில்லை. கடைசியில் ஜூன் மாதம் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதம் மத்தியில் இந்தியா – சீனா இடையே மோதல் ஏற்பட்டு 20 வீரர்கள் உயிரிழந்ததால் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.