லாபம் ரூ.4,845 கோடி… கெத்து காட்டிய இன்போசிஸ்… இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பு….

லாபம் ரூ.4,845 கோடி… கெத்து காட்டிய இன்போசிஸ்… இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பு….

2020 செப்டம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,845 கோடி ஈட்டியுள்ளது.

நம் நாட்டின் இரண்டாவது பெரிய ஐ.டி. சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 செப்டம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,845 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 20.5 சதவீதம் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.4,019 கோடி ஈட்டியிருந்தது.

லாபம் ரூ.4,845 கோடி… கெத்து காட்டிய இன்போசிஸ்… இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பு….
இன்போசிஸ்

2020 செப்டம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான ஒட்டு மொத்த வருவாய் ரூ.24,570 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஜூன் காலாண்டைக் காட்டிலும் 3.8 சதவீதம் அதிகமாகும். இன்போசிஸ் நிறுவனம் இந்த நிதியாண்டுக்கான தனது வருவாய் வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை 2 முதல் 3 சதவீதமாக இருக்கும் என மறுமதிப்பீடு செய்துள்ளது. முன்பு வருவாயில் வளர்ச்சி 2 சதவீதம் என்ற அளவுக்கே இருக்கும் என கணித்து இருந்தது.

லாபம் ரூ.4,845 கோடி… கெத்து காட்டிய இன்போசிஸ்… இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பு….
இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.12 அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று இன்போசிஸ் பங்கு விலை 1.89 சதவீதம் குறைந்து ரூ.1,136.10ல் முடிவுற்றது.