அக்டோபர் 13ம் தேதியன்று காலாண்டு நிதி நிலை முடிவுகள், டிவிடெண்ட் அறிவிப்பு.. இன்போசிஸ் தகவல்

அக்டோபர் 13ம் தேதியன்று காலாண்டு நிதி நிலை முடிவுகள், டிவிடெண்ட் அறிவிப்பு.. இன்போசிஸ் தகவல்

இன்போசிஸ் நிறுவனம் தனது 2021 செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள், இடைக்கால டிவிடெண்ட் குறித்து அக்டோபர் 13ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

நாட்டின் 2வது பெரிய ஐ.டி. சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் பங்குச் சந்தை அமைப்புகளிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தங்களது நிறுவனத்தின் 2021 செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அக்டோபர் 13ம் தேதியன்று வெளியிட உள்ளதாகவும், பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட் வழங்குவது தொடர்பாக நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு அன்று பரிசீலனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 13ம் தேதியன்று காலாண்டு நிதி நிலை முடிவுகள், டிவிடெண்ட் அறிவிப்பு.. இன்போசிஸ் தகவல்
இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.5,195 கோடி ஈட்டியிருந்தது. இன்போசிஸ் நிறுவனம் அடுத்த மாதம் வெளியிட உள்ள 2021 செப்டம்பர் (ஜூலை-செப்டம்பர்) காலாண்டு நிதி நிலை முடிவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று சந்தை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். சர்வதேச அளவில் ஐ.டி. சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால் இன்போசிஸ் நிறுவனத்தின் நிதி நிலை முடிவு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 13ம் தேதியன்று காலாண்டு நிதி நிலை முடிவுகள், டிவிடெண்ட் அறிவிப்பு.. இன்போசிஸ் தகவல்
இன்போசிஸ்

அதேசமயம், இந்த காலாண்டில் நிறுவனத்தால் எடுக்கப்பட்ட ஊதிய உயர்வு நடவடிக்கை அந்நிறுவனத்தின் லாப வரம்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஐ.டி. துறையில் திறமையான பணியாளர்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால் தனது நிறுவனத்தில் திறமைமிக்க பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ள இத்துறையை சேர்ந்த நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது.