இன்போசிஸ் வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்தது.. டிவிடெண்டாக ரூ.15 வழங்க பரிந்துரை

இன்போசிஸ் வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்தது.. டிவிடெண்டாக ரூ.15 வழங்க பரிந்துரை

இன்போசிஸ் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.5.076 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் 2வது பெரிய ஐ.டி. சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.5.076 கோடி ஈட்டியுள்ளது. இது நிபுணர்களின் கணிப்பை காட்டிலும் குறைவாகும். மேலும் முந்தைய டிசம்பர் காலாண்டைக் காட்டில் லாபம் 2.3 சதவீதம் குறைந்துள்ளது.

இன்போசிஸ் வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்தது.. டிவிடெண்டாக ரூ.15 வழங்க பரிந்துரை
இன்போசிஸ்

2021 மார்ச் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.26,311 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 1.5 சதவீதம் அதிகமாகும். இன்போசிஸ் நிறுவனம் 2020-21ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்று டிவிடெண்டாக ரூ.15 வழங்க பரிந்துரை செய்துள்ளது.

இன்போசிஸ் வருவாய் அதிகரித்தும் லாபம் குறைந்தது.. டிவிடெண்டாக ரூ.15 வழங்க பரிந்துரை
இன்போசிஸ்

ஒரு பங்குக்கு அதிகபட்சமாக ரூ.1,750 என்ற விலையில் ரூ.9,200 கோடி வரை பங்குகளை திரும்ப வாங்குவதற்கு இன்போசிஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இன்போசிஸ் பங்கு விலை 1.91 சதவீதம் வீழ்ந்து ரூ.1,398.60ஆக குறைந்தது.