‘என்னது..ரோட்டில் தங்கத் துகள்களா?’ வைரலான தகவலால் குவிந்த மக்கள் கூட்டம்!

‘என்னது..ரோட்டில் தங்கத் துகள்களா?’ வைரலான தகவலால் குவிந்த மக்கள் கூட்டம்!

ஓசூர் அருகே சாலையோரத்தில் தங்கத் துகள்கள் இருப்பதாக பரவிய தகவலால், தங்கத்தை எடுக்க மக்கள் கூட்டம் குவிந்தது.

தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. இங்கு தங்கம் இல்லாமல், எந்த நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. இத்தகைய காலக்கட்டத்தில், தங்கம் சாலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தால் மக்கள் சும்மா இருப்பாங்களா என்ன?. அப்படி ஒரு சம்பவம் தான் ஓசூர் அருகே நடந்திருக்கிறது.

‘என்னது..ரோட்டில் தங்கத் துகள்களா?’ வைரலான தகவலால் குவிந்த மக்கள் கூட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிறிய வடிவிலான தங்க நாணயங்கள் சாலையோரம் கிடப்பதாக மக்கள் சிலருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த விஷயம் காட்டுத்தீயாய் பரவ, ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆண்களும் பெண்களும் குவிந்தனர். பின்னர், அப்பகுதியில் மக்கள் கையால் குழி தோண்டி தங்கத்தை தேடிக் கொண்டிருந்த நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

‘என்னது..ரோட்டில் தங்கத் துகள்களா?’ வைரலான தகவலால் குவிந்த மக்கள் கூட்டம்!

இது குறித்து பேசிய வருவாய்த்துறையினர், அப்பகுதியில் கிடந்தது உண்மையான தங்கத் துகள்கள் தானா? என்பதை ஆய்வு செய்தால் தான் உண்மை தெரிய வரும் என்றும் அங்கிருந்து தங்கத்தை எடுத்தவர்களிடம் இருந்து அதனை கைப்பற்றி ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.