’ஜீப் தீப்பிடித்தும் அவர் பயப்படவில்லை’ ’விடுதலைப் புலிகள்’ பிரபாகரனின் பாதுகாவலர் சொல்லும் தகவல்கள்

 

’ஜீப் தீப்பிடித்தும் அவர் பயப்படவில்லை’ ’விடுதலைப் புலிகள்’ பிரபாகரனின் பாதுகாவலர் சொல்லும் தகவல்கள்

இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக தந்தை செல்வா காலகட்டத்தில் அமைதி வழிப் போராட்டம் நடந்தது. அதன்பின், பல ஆயுதக்குழுக்கள் உருவாகி போராட்டத்தை தீவிரப் படுத்தின. அவற்றில் முதன்மையானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

2008 -09 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஈழத்தின் இறுதிகட்டப் போரில் அந்த இயக்கம் அழிக்கப்பட்டது என்றும் அதன் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை அரசு அறிவித்தது. ஆயினும், பிரபாகரன் மரணத்தில் பல சந்தேகங்களை புலிகளின் ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர்.

’ஜீப் தீப்பிடித்தும் அவர் பயப்படவில்லை’ ’விடுதலைப் புலிகள்’ பிரபாகரனின் பாதுகாவலர் சொல்லும் தகவல்கள்

புலிகள் இயகத்த தலைவர் வே.பிரபாகரனின் முதன்மை பாதுகாவலராக 1996 முதல் 2007 ஆம் ஆண்டுவரை இருந்தவர் ரகு. இவர் இறுதியுத்தத்தில் சரணடைந்தார். தற்போது எளிமையான கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் ராணுவத்தில் சரணடைந்தபோது இவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் பெரிய ஆயுதங்களைக் கைப்பற்றியதாகவும், பிரபாகரன் பற்றி செய்திகளை அறிந்ததாகவும் இலங்கையின் முக்கிய காவல் அதிகாரி தெரிவித்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரகு சமீபத்தில் இலங்கையில் உள்ள ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறிய தகவல்கள் பலவும் புதிய செய்திகளாக இருந்தன.

’ஜீப் தீப்பிடித்தும் அவர் பயப்படவில்லை’ ’விடுதலைப் புலிகள்’ பிரபாகரனின் பாதுகாவலர் சொல்லும் தகவல்கள்

இந்திய அமைதிப் படை காலக்கட்டத்தில்தான் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததாகவும், பல கட்டப் பயிற்சிக்குப் பிற்கு பிரபாகரனின் பாதுகாவலராக தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மூன்று கார்கள் வரும் எதில் செல்வது என்பதை பிரபாகரனே தேர்வு செய்வார். அது அவரின் பாதுகாப்புக்கான ஏற்பாடு என்றும், ஒருமுறை ஜீப்பில் செல்லும்போது திடீரென்று தீப்பிடித்துவிட்டது. உடனே ஜீப் நிறுத்தப்பட்டு பிரபாகரன் இறங்கினார். ஆனாலும் அந்த நேரத்தில் கொஞ்சம் பதற்றமோ பயமோ அவர் கொள்ள வில்லை என்று தெரிவித்திருக்கிறார். 

பிரபாகரனுக்கு சமையல் செய்ய மூவர் இருந்ததாகவும் உணவை தான் முதலில் சாப்பிட்டு, அரைமணி நேரம் கழித்து பிரபாகரன் சாப்பிடுவார். விஷம் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சோதிக்கவே இந்த நடைமுறை என்றும் பிரபாகரனின் முன்னாள் பாதுகாவலர் ரகு கூறியதாக இலங்கை செய்திகள் தெவிரிக்கின்றன.