சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : ரோல் நம்பரை தெரிந்து கொள்வது எப்படி?

 

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : ரோல் நம்பரை தெரிந்து கொள்வது எப்படி?

நாடெங்கிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவியதால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களின் பருவத் தேர்வின் அடிப்படையில் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன் படி, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகின்றன. மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொள்ள அவர்களது ரோல் நம்பரை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : ரோல் நம்பரை தெரிந்து கொள்வது எப்படி?

ரோல் நம்பரை தெரிந்துக் கொள்ள…

படி 1 : cbse.nic.in என்ற சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

படி 2 : அந்தப் பக்கத்தை கீழே ஸ்க்ரோல் செய்து ‘ரோல் நம்பர் ஃபைண்டர்’ என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்

படி 3: ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அங்கு ‘தொடரவும்’ (continue) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

படி 4: 10 அல்லது 12 ஆம் வகுப்பு என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

படி 5: மாணவர்கள் தங்களது பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, தாய் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.

படி 6: தகவலை தேடுங்கள் ( search data) என்பதை கிளிக் செய்தால் மாணவர்களுக்கு 10 அல்லது 12 ஆம் வகுப்புக்கான ரோல் நம்பர் கிடைக்கப்பெறும்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : ரோல் நம்பரை தெரிந்து கொள்வது எப்படி?

அந்த ரோல் நம்பரை பயன்படுத்தி www.cbseresults.nic.in என்ற இணையதள பக்கத்தில் ரிசல்ட்டை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் குறைந்தபட்சம் ஒவ்வொரு பாடத்திலும் 33% மதிப்பெண்களை பெற வேண்டும். மாணவர்களின் பருவத்தேர்வுகளில் குறைவாக மதிப்பெண்கள் எடுத்திருக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குமாறு சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.