”இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 போன்” – ”பிளிப்கார்டில் 4ம் தேதி அறிமுகம்”

 

”இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 போன்” – ”பிளிப்கார்டில் 4ம் தேதி அறிமுகம்”

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ஹாட் 10 ஸ்மார்ட்போன் வரும் 4ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

”இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 போன்” – ”பிளிப்கார்டில் 4ம் தேதி அறிமுகம்”

சில தினங்களுக்கு முன், பாகிஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், வரும் 4ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பாகிஸ்தானில் பட்ஜெட் பிரிவில் அறிமுகப்படுத்தப்படும் இந்த போன், 6.78 இன்ச் எச்டி ஐபிஎஸ் திரை, ஆண்டிராய்ட் 10 இய ங்குதளம், மீடியா டெக் ஹீலியோ பிராசசர்,

”இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 போன்” – ”பிளிப்கார்டில் 4ம் தேதி அறிமுகம்”

பின்புறத்தில் 16 எம்பி மற்றும் 2 எம்பி என இரண்டு கேமராக்களும், முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமரா கொண்டது.
மேலும் 10 வாட்ஸ் சார்ஜருடன் கூடிய 5200 எம்ஏ எச் பேட்டரி, வைபை, 4ஜி, ஜிபிஎஸ், புளூடூத், ஹெட்போன் இணைக்கும் வசதி, என சகல சிறப்பம்சங்கள் உள்ளன.

”இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 போன்” – ”பிளிப்கார்டில் 4ம் தேதி அறிமுகம்”

பாகிஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்ட போது 4 ஜிபி ரேம் – 64 ஜிபி ரக போனின் விலை இந்திய மதிப்பில், 9,300 ரூபாய் ஆகும். ஏறத்தாழ இதே விலைக்கு தான் இந்தியாவிலும் இந்த போன் விற்பனைக்கு அறிமுகப்படுதப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அறிமுகம் தொடர்பான போஸ்டரை பிளிப்கார்ட் வலைதளத்தில் காண முடிகிறது. அதன்படி வரும் 4ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.

  • எஸ். முத்துக்குமார்