‘லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்’ ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்!

‘லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்’ ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்!

லடாக் எல்லையில் அத்துமீறி ஊடுருவிய சின வீரரை பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் இன்று வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது, அத்துமீறி இந்திய எல்லையைத் தாண்டி ஊடுருவிய சீன வீரர் ஒருவரை பார்த்த பாதுகாப்பு படையினர், அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களிடம் சிக்கிய அந்த சீன வீரர், விதிமுறைப்படி சீனாவிடம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

‘லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்’ ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனப்படையினர், திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. மற்றொரு முறை இச்சம்பவம் தொடர்ந்தால், இந்திய ராணுவம் வேடிக்கை பார்க்காது என்றும் காட்டமாக தெரிவித்திருந்தது.

‘லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்’ ஊடுருவிய சீன வீரர் சிக்கினார்!

மேலும், இந்திய ராணுவத்துக்கு வலிமை சேர்க்கும் விதமாக 5 ரஃபேல் விமானங்களை பாதுகாப்பு படையில் சேர்த்தது. இந்த சம்பவத்தில் இருந்தே எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீனப்படை மீண்டும் மீண்டும் அத்துமீறி ஊடுருவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.