சென்னையில் தொற்று விகிதம் குறைவு… திருப்தி அளித்தாலும் மகிழ்ச்சி இல்லை! – ராமதாஸ் கருத்து

 

சென்னையில் தொற்று விகிதம் குறைவு… திருப்தி அளித்தாலும் மகிழ்ச்சி இல்லை! – ராமதாஸ் கருத்து

சென்னையில் கொரோனாத் தொற்று விகிதம் 9.12 சதவிகிதமாக குறைந்திருப்பது திருப்தி அளிப்பதாக இருந்தாலும் அது மகிழ்ச்சியைத் தரவில்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தொற்று விகிதம் குறைவு… திருப்தி அளித்தாலும் மகிழ்ச்சி இல்லை! – ராமதாஸ் கருத்து

http://


சென்னையில் கொரோனாத் தொற்று குறைந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. முன்பு சென்னையில் கொரோனா பரிசோதனை செய்பவர்களில் கொரோனா கண்டறியப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்றும், தற்போது அது மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தொற்று விகிதம் குறைவு… திருப்தி அளித்தாலும் மகிழ்ச்சி இல்லை! – ராமதாஸ் கருத்துஇது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்களில், “சென்னையில் கொரோனா நோய்த்தொற்று விகிதம் 65 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக 9.12 % என்ற ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளது. இது திருப்தியளிக்கக் கூடிய செய்தி தான். ஆனால், மகிழ்ச்சியளிக்கக் கூடியது அல்ல. கொரோனா இல்லாத சென்னையே மகிழ்ச்சியளிக்கும்!

http://


தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை நேற்று 52,993 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே இது தான் அதிகமாகும். பாராட்டுகள். மாவட்டங்களில் சோதனைகளை மேலும் அதிகரித்து கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்!

சென்னையில் தொற்று விகிதம் குறைவு… திருப்தி அளித்தாலும் மகிழ்ச்சி இல்லை! – ராமதாஸ் கருத்துசென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது நமது கைகளில் தான் உள்ளது. வெளியில் செல்வதை தவிர்ப்போம், சென்றாலும் #முகக்கவசம் அணிவோம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்போம், கைகளை நன்றாக கழுவுவோம். இவற்றை செய்தால் வெற்றி நமக்கு… வீழ்ச்சி கொரோனாவுக்கு!” என்று கூறியுள்ளார்.