INDvsWI: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி – டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது!

 

INDvsWI: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி – டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது.

இவ்விரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து, கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 2-வது நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் எடுத்தது. 

அதன்பின் களமிறங்கிய இந்திய அணி, 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 81 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இன்று தொடங்கிய 3-ஆம் நாள் போட்டியில் இந்தியா 367 ரன்கள் குவித்தது. 

56 ரன்கள் பிந்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 127 ரன்னில் சுருண்டது. இது இந்தியாவை விட 71 ரன்கள் முன்னிலை என்பதால், 72 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

இதன்மூலம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை 2 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.