முதல் டெஸ்ட்டிலேயே இந்தியாவிடம் சரணடைந்த இங்கிலாந்து

 

முதல் டெஸ்ட்டிலேயே இந்தியாவிடம் சரணடைந்த இங்கிலாந்து

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

Image

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இரு அணிகளிலும் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் ஆடினர். இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாமல் இந்திய அணி ஆடியது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ் மற்றும் சர்குல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் சிப்லி ஆகியோர் களமிறங்கினர். ஜஸ்பிரித் பும்ராவின் முதல் ஓவரிலே ரோரி பர்ன்ஸ் எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.நிதானமாக ஆடி வந்த சிப்லியை 18 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார் சமி. அடுத்து வந்த சாக் கிராவ்லியை 21 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார் முகமது சிராஜ்.சிராஜின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளுடன் ரன் கணக்கை தொடங்கிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 89 பந்துகளில் அரை சதம் அடித்தார்.அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 29 ரன்களிலும்,லாரன்ஸை ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேற்றி அசத்தினார் முகமது சமி. அடுத்து வந்த அபாய வீரர் பட்லரை பும்ரா டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.

Image

சிறப்பாக ஆடி வந்த ரூட் 64 ரன்களில் சர்குல் தாகூர் ஒரு ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.65.4 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை சேர்த்தது. இங்கிலாந்து அணியின் சாம் கரன் 27 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியை பொறுத்தவரை 4 விக்கெட்டுகளையும்,முகமது சமி 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக கே எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினார். இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 13 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்களை எடுத்திருந்தது. ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 9 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர்.