அஸ்வின் வர்ரதுக்குள்ளயே இத்தன பேர் அவுட் ஆயிடீங்ளே… எகிறியடிக்கும் கோலி படை!

 

அஸ்வின் வர்ரதுக்குள்ளயே இத்தன பேர் அவுட் ஆயிடீங்ளே… எகிறியடிக்கும் கோலி படை!

நியூஸிலாந்துடன் யார் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதப் போகிறார்கள் என்பதை நிர்ணயிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி இந்தியா-இங்கிலாந்து இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்ற முறை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய அதே அகமதாபாத் மைதானத்திலேயே இப்போட்டி நடைபெறுகிறது. இம்முறை பேட்டிங்குக்கு சாதகமாக ஃபிட்ச் மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும், அதே உக்கிரத்துடனே ஆடுகளத்தின் தன்மை இருக்கிறது.

அஸ்வின் வர்ரதுக்குள்ளயே இத்தன பேர் அவுட் ஆயிடீங்ளே… எகிறியடிக்கும் கோலி படை!

வழக்கம் போல டாஸை கோலி கோட்டை விட ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். முன்னமே அறிவிக்கப்பட்டது போல பும்ரா விலகலுக்குப் பதில் சிராஜ் அணிக்குள் திரும்பியிருக்கிறார். அதேபோல இங்கிலாந்து அணியில் டாம் பெஸ்ஸும் லாரன்ஸும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். கடந்த இரு போட்டிகளிலும் விக்கெட் வேட்டை நடத்திய அக்சர் படேல் இம்முறையும் தவறவிடவில்லை. வந்த வேகத்திலேயே தொடக்க ஆட்டக்காரர்கள் சிப்லேவையும் கிராலியையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து வழியனுப்பிவைத்தார்.

இம்முறையாவது ஜோ ரூட் இந்திய பவுலர்களிடமிருந்து தப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிராஜ் அவரைக் காலி செய்து வெளியே அனுப்பினார். இப்போதைய நிலவரப்படி 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது. தற்போது ஸ்டோக்ஸும் பெயர்ஸ்டோவும் களத்தில் நிற்கின்றனர். இருவரும் பொறுப்பாக நிதானமாக ஆடிவருகின்றனர். இருவரும் இணைந்து அணியை மீட்பார்களா என அடுத்தடுத்த செசன்களில் தெரியவரும். இன்னும் சுழல் புயல் அஸ்வின் பந்துவீச வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.