Home விளையாட்டு கிரிக்கெட் நீ விதைத்த வினையெல்லாம்… இந்தியாவிற்கு இங்கிலாந்தின் தரமான செய்கை!

நீ விதைத்த வினையெல்லாம்… இந்தியாவிற்கு இங்கிலாந்தின் தரமான செய்கை!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. ஆரம்பத்தில் டாஸ் ஜெயித்த ரூட் பேட்டிங்கை தேர்வுசெய்தார். இம்மைதானத்தில் நடக்கும் முதல் சர்வதேச போட்டி என்பதால் ஆடுகளத்தின் தன்மை குறித்து எவரும் அறிந்திருக்கவில்லை. நேற்று இங்கிலாந்துக்கு நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது ஆடுகளம் முழுக்க முழுக்க ஸ்பின் பவுலிங்குக்கே சாதகமாக அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது.

நேற்று சீட்டுக்கட்டாய் சரிந்த இங்கிலாந்து விக்கெட்டுகளைப் பார்த்து உள்ளம் பூரித்துப் போன இந்திய ரசிகர்களுக்கு இன்று இந்திய வீரர்கள் கொடுத்ததெல்லாம் அதிர்ச்சி ரகம். நேற்றைய நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸ் இந்தியா 99 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சீரான நிலையிலேயே இருந்தது. இங்கிலாந்துடன் ஒப்பிடும் வகையில் சிறப்பான நிலையில் தான் இருந்தது. தொடக்கவீரர் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். இச்சூழலில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் 2.30 மணிக்குத் தொடங்கியது.

Image

தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இந்தியாவின் சோழியை இங்கிலாந்து முடித்தது. தனது பேட்டிங் படையை அக்சர்-அஸ்வின் சுழல் கூட்டணியை வைத்து மடக்கியதைப் போலவே ஸ்பின் அஸ்திரத்தை தானே எடுத்து இந்திய படையைச் சுருட்டினார் ரூட். ரஹானே அவுட்டானவுடன் ரோஹித் சர்மா வெளியேற பண்ட்டும் அடுத்த இரண்டு ரன்களில் வெளியேறினார். மூவரும் 3 ரன்கள் எடுப்பதற்குள் நொடிப்பொழுதில் விக்கெட்டைப் பறிகொடுத்து இந்தியாவை அதலபாதளத்துக்குத் தள்ளினர். தன்னுடைய விக்கெட்டை எடுத்த அஸ்வின் விக்கெட்டை தூக்கி ரூட் பழிதீர்த்துக் கொண்டார்.

Image

100 ரன்களிலிருந்து 45 ரன்கள் அடிப்பதற்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருக்கிறது. முடிவில் இந்திய அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போது இங்கிலாந்தை விட 33 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews