இது இங்கிலாந்து டீமா? இல்ல பி டீமா? – 112 ரன்களுக்குள் சுருண்டுபோன சோகம்!

 

இது இங்கிலாந்து டீமா? இல்ல பி டீமா? – 112 ரன்களுக்குள் சுருண்டுபோன சோகம்!

சென்னையில் நடைபெற்ற முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும் இங்கிலாந்தும் தலா ஒரு போட்டியில் வென்று சமபலத்தில் இருக்கின்றன. யார் முன்னிலை பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்கியது.

Image

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேராவில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி என்பதால் இப்போட்டிக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியது.

Image

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வுசெய்தார். அடுத்த போட்டியில் டாஸ் ஜெயித்தால் இம்முடிவை அவர் பரிசீலனை செய்யக்கூடும். அப்படியாகவே இங்கிலாந்தின் பேட்டிங் அமைந்தது. சீட்டுக்கட்டு சரிவதைப் போல ஒவ்வொரு வீரரும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டிக்கொண்டிருந்தனர். ரூட்டால் கூட இங்கிலாந்தைக் காப்பாற்ற முடியவில்லை. புதிதாகச் சேர்க்கப்பட்ட தொடக்க வீரர் கிராலி மட்டும் அரைசதம் அடித்து அணியின் மானத்தைக் காப்பாற்றியிருக்கிறார். சிப்லேவும் பெயர்ஸ்டோவும் டக்அவுட்டில் சென்று கப்பலேற்றிவிட்டார்கள்.

Image

இது அனைத்திற்கும் காரணம் அக்சர்-அஸ்வின் சுழல் கூட்டணி தான். இருவரும் சொல்லி சொல்லி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை உருவிக்கொண்டிருந்தனர். முதல் போட்டி என்பதால் ஆடுகளம் எதற்குச் சாதகமாக இருக்கும் என்ற சந்தேகம் நிலவியது. சந்தேகமே வேண்டாம் ஸ்பின்னுக்குத் தான் சாதகாமாக இருக்கிறது என சொல்லாமல் சொல்லியிருக்கிறது. தனது அறிமுக போட்டியிலே பைபர் எடுத்த அக்சர் இந்தப் போட்டியிலும் பைபர் எடுத்து அசத்தியிருக்கிறார். அவர் மொத்தமாக ஆறு விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இறுதியில் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.