பும்ரா வேகப்பந்தில் சரிந்த விக்கெட்டுகள் – IndVsAus டெஸ்ட் Updates

 

பும்ரா வேகப்பந்தில் சரிந்த விக்கெட்டுகள் – IndVsAus டெஸ்ட் Updates

இது இரண்டாம் நாள். இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

ப்ரித்தீவ் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க்கிடம் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார். 44 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார் மயங். 160 பந்துகளைச் சந்தித்த புஜாரா 43 ரன்களை எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரிகள் அடங்கும்.

பும்ரா வேகப்பந்தில் சரிந்த விக்கெட்டுகள் – IndVsAus டெஸ்ட் Updates

விராட் கோலி தனது அரை சதத்தைக் கடந்தார். 130 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்தார். 180 பந்துகளைச் சந்தித்து 74 ரன்களை விராட் கோலி எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் ரஹானே 42 ரன்களில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானார். விஹாரி 16 ரன்களோடு அவுட்டானர்.

நேற்றைய ஆட்ட முடிவில் 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. 11 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிக்கொடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 74 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பும்ரா வேகப்பந்தில் சரிந்த விக்கெட்டுகள் – IndVsAus டெஸ்ட் Updates

அடுத்து ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகியோர் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கினர். வெகு நிதானமாக ஆடினர் இருவரும்.

51 பந்துகளில் 8 ரன்கள் எதிருந்த வேட் விக்கெட்டை எல்.பி.டபுள்யூ முறையில் தூக்கினார் இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. அடுத்த சில ஓவர்களில் பும்ராவின் புயல் வேகப் பந்துவீச்சு ஜோ பர்ன்ஸ் விக்கெட்டையும் பறித்தது. அப்போது அவர் 8 ரன்கள் எடுத்திருந்தார்.

பும்ரா வேகப்பந்தில் சரிந்த விக்கெட்டுகள் – IndVsAus டெஸ்ட் Updates

மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இடைவெளிக்குப் பிறகு பந்து வீச வந்தார் தமிழகத்தின் அஸ்வின். அவர் சுழற்பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தடு ஸ்மித்.

தற்போது 3 விக்கெட்டுகளை இழந்து, 46 ரன்களை எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி.