வட்டி வருவாய் அமோகம்.. இண்டஸ்இந்த் வங்கி லாபம் 190 சதவீதம் வளர்ச்சி..

வட்டி வருவாய் அமோகம்.. இண்டஸ்இந்த் வங்கி லாபம் 190 சதவீதம் வளர்ச்சி..

இண்டஸ்இந்த் வங்கி 2021 மார்ச் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.875.95 கோடி ஈட்டியுள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியான இண்டஸ்இந்த் வங்கி தனது மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இண்டஸ்இந்த் வங்கி 2021 மார்ச் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.875.95 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 190.2 சதவீதம் அதிமாகும்.

வட்டி வருவாய் அமோகம்.. இண்டஸ்இந்த் வங்கி லாபம் 190 சதவீதம் வளர்ச்சி..
இண்டஸ்இந்த் வங்கி

2021 மார்ச் காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கியின் நிகர வட்டி வருவாய் ( வழங்கிய கடனுக்கு பெறப்படும் வட்டிக்கும், பெறப்பட்ட டெபாசிட்டுக்கு வழங்கப்படும் வட்டிக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.3,534.61 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 9.4 சதவீதம் அதிமாகும்.

வட்டி வருவாய் அமோகம்.. இண்டஸ்இந்த் வங்கி லாபம் 190 சதவீதம் வளர்ச்சி..
இண்டஸ்இந்த் வங்கி

மார்ச் காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கியின் மொத்த வாராக் கடன் 0.93 சதவீதம் உயர்ந்து 2.67 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.47 சதவீதம் ஏற்றம் கண்டு 0.69 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.24 சதவீதம் சரிந்து ரூ.914.00 ஆக குறைந்தது.