ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு.. மத்திய பிரதேச காங்கிரசார் மீது வழக்கு பதிவு

ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு.. மத்திய பிரதேச காங்கிரசார் மீது வழக்கு பதிவு

மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கமல் நாத்துக்கு மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் உருவ பொம்மை எரித்த காங்கிரசார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த சனிக்கிழமையன்று உஜ்ழைனியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல் நாத் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, உலகில் பரவியிருக்கும கொரோனா, வைரஸின் இந்திய உருமாற்றம் அடைந்தது என்று அறியப்படுகிறது என்று தெரிவித்து இருந்தார்.

ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு.. மத்திய பிரதேச காங்கிரசார் மீது வழக்கு பதிவு
கமல் நாத்

இதனையடுத்து கமல் நாத்துக்கு எதிராக எப்.ஐ.ஆா. பதிவு செய்யக்கோரி பா.ஜ.க. பிரதிநிதிகள் குழு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக, கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து அவர் கூறிய கருத்துக்களால் பீதியை ஏற்படுத்தியதாக மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மீது நேற்றுமுன்தினம் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு.. மத்திய பிரதேச காங்கிரசார் மீது வழக்கு பதிவு
காங்கிரஸ்

கமல்நாத்துக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதற்கு மத்தியிலும் இந்தூரில் அம்பேத்கர் சிலை முன்பு சில காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட காங்கிரசார் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் உருவ பொம்மையை எரித்தனர். இதனையடுத்து முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஜ்ஜன் சிங் வர்மா,சஞ்சய் சுக்லா, விஷால் படேல் மற்றும் இந்தூர் காங்கிரஸ் தலைவர் ரமீஸ் கான் மற்றுமு் அவர்களது 10 கூட்டாளிகள் மீது போலீசார் 188வது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.