ஞாயிறு தோறும் லோக்கல் ரவுடிகளுக்கு காவல் நிலையத்தில் உடற்பயிற்சி… ம.பி. போலீசாரின் புதிய முயற்சி

ஞாயிறு தோறும் லோக்கல் ரவுடிகளுக்கு காவல் நிலையத்தில் உடற்பயிற்சி… ம.பி. போலீசாரின் புதிய முயற்சி

மத்திய பிரதேசம் இந்தூரில் ஞாயிறு தோறும் லோக்கல் ரவுடிகள் காவல் நிலையம் வந்து தகவல் அளிக்க வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும் அன்று அவர்களுக்கு உடற்பயிற்சியும் போலீசார் அளி்க்கின்றனர்.

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாராமரிக்க போலீசார் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மத்திய பிரதேச போலீசார் மேற்கொண்டுள்ள ஒரு தனித்துவமான நடவடிக்கை தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் மத்திய பிரதேச போலீசாரின் அந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

ஞாயிறு தோறும் லோக்கல் ரவுடிகளுக்கு காவல் நிலையத்தில் உடற்பயிற்சி… ம.பி. போலீசாரின் புதிய முயற்சி
மத்திய பிரதேச போலீசார்

மத்திய பிரதேசம் இந்தூரில் ராவ்ஜி பஜாரில் உள்ள காவல் நிலையத்துக்கு அந்த பகுதிகளில் உள்ள கிரிமினல்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று சென்று தங்களது தனிப்பட்ட தகவல்களை புதுப்பித்து செல்லுகின்றனர். மேலும் அன்று அவர்களுக்கு காவல்நிலையத்தில் உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு நேர்மறையான ரிசல்ட்கள் கிடைக்க தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஞாயிறு தோறும் லோக்கல் ரவுடிகளுக்கு காவல் நிலையத்தில் உடற்பயிற்சி… ம.பி. போலீசாரின் புதிய முயற்சி
மத்திய பிரதேச போலீஸ்

போலீசாரின் தனித்துவமான இந்த நடவடிக்கை குறித்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (இந்தூர் மேற்கு) ராஜேஷ் வியாஸ் கூறியதாவது: ஒரு முயற்சி தொடங்கப்பட்டது. குண்டர்கள் மற்றும் கண்காணிப்பின்கீழ் உள்ள குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று காவல் நிலையம் வந்து தங்களது தனிப்பட்ட தகவல்களை புதுப்பித்து செல்ல வேண்டும். அவர்கள் குற்றத்திலிருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்படுவார்கள். நாங்கள் அவர்களை உடல் பயிற்சி செய்ய வைக்கிறோம். அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.