ஏப்ரல் 30ம் தேதி வரை யாரும் கல்யாணம் செய்யக்கூடாது.. நாங்களும் விட மாட்டோம்.. கலெக்டர் அதிரடி அறிவிப்பு

ஏப்ரல் 30ம் தேதி வரை யாரும் கல்யாணம் செய்யக்கூடாது.. நாங்களும் விட மாட்டோம்.. கலெக்டர் அதிரடி அறிவிப்பு

மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி வரை திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் கோரதாண்டவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. அந்த மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க முதல்வர் சிவ்ராஜ் சிங் தலைமையிலான அரசு கடுமையான நடவடிக்கைகள எடுத்து வருகிறது.

ஏப்ரல் 30ம் தேதி வரை யாரும் கல்யாணம் செய்யக்கூடாது.. நாங்களும் விட மாட்டோம்.. கலெக்டர் அதிரடி அறிவிப்பு
மனிஷ் சிங்

இந்தூர் மாவட்டத்தில் ஏப்ரல் 30ம் தேதி திருமணங்களுக்கு அனுமதி கிடையாது என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் சிங் கூறியதாவது: கோவிட்-19 பரவலின் அதிக ஆபத்து உள்ளதால் திருமணங்களுக்கு அனுமதி கிடையாது. ஏப்ரல் 30ம் தேதி வரை மக்கள் தங்களது திருமண நிகழ்ச்சிகளை ஒத்திவைக்கும்படியும், வீட்டுக்குள்ளே இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏப்ரல் 30ம் தேதி வரை யாரும் கல்யாணம் செய்யக்கூடாது.. நாங்களும் விட மாட்டோம்.. கலெக்டர் அதிரடி அறிவிப்பு
ரெம்டேசிவிர்

மருத்துவமனைகள் நிரம்பி உள்ளதால் இது (மக்கள் வீட்டுக்குள்ளே இருப்பது) கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க உதவும். ரெம்டேசிவிர் ஊசி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் ரெம்டேசிவிர் ஊசியை கள்ளச்சந்தையில் விற்பனை ஈடுபட்டதாக பிடிபட்ட 2 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் அல்லது கடைக்காரர்களாக இருந்தாலும், கள்ளச்சந்தையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.