இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; வெறும் ஏழே நொடிகளில் மருத்துவமனை தரைமட்டம்!

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; வெறும் ஏழே நொடிகளில் மருத்துவமனை தரைமட்டம்!

கடந்த வாரம் இந்தோனேஷியாவில் மாயமான விபத்தில் பயணித்த 62 பயணிகளின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. நாட்டு மக்கள் அந்த சோகத்திலிருந்தே இன்னும் மீளவில்லை. அந்த சோகம் அடங்குவதற்குள் தற்போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளைய பகுதிக்கு அருகில் இருப்பதால் அங்கு அடிக்கடி இயற்கை பேரழிவு நிகழும். இன்றும் அந்த பேரழிவு நேர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுலவேசி தீவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளியாகப் பதிவாகியிருக்கிறது.

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; வெறும் ஏழே நொடிகளில் மருத்துவமனை தரைமட்டம்!

வெறும் ஏழே நொடிகள் மட்டும் நீடித்த இந்த நிலநடுக்கம் பெரும் சேதம் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை ஒன்று தரைமட்டமாகியுள்ளது. அதில் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் என அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

கவர்னர் அலுவலகத்தின் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; வெறும் ஏழே நொடிகளில் மருத்துவமனை தரைமட்டம்!

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்துவந்த ஏராளமான மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்படுள்ளனர். பல்வேறு மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்துவருகின்றனர். இதே தீவில் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் ஆயிரம் மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.