சீனா பிரச்னை எதிரொலி… அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறுத்தம்!

 

சீனா பிரச்னை எதிரொலி… அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறுத்தம்!

எல்லையில் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியைக் கோவில் அறக்கட்டளை நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சீனா பிரச்னை எதிரொலி… அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறுத்தம்!அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என பல ஆண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சையை உச்ச நீதிமன்றம் தீர்த்துவைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்குவதாக இருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பூமி பூஜை போட்டதோடு பணி நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் மீண்டும் பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் தொடங்கின.

சீனா பிரச்னை எதிரொலி… அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறுத்தம்!இந்த நிலையில் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் சீனாவுக்கு எதிரான எதிர்ப்பு நிலை உள்ளது. சீனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த நிலையில் கட்டுமானப் பணிகளை நிறுத்துவதாக ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமாக உள்ளதாலும் நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், வரும் நாட்களில் கட்டுமானப் பணிகளை தொடங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.