கொரோனா காலத்திலும் மறைமுக வரி வசூல் அமோகம்… மத்திய அரசின் கஜானாவுக்கு வந்த ரூ.10.71 லட்சம் கோடி

கொரோனா காலத்திலும் மறைமுக வரி வசூல் அமோகம்… மத்திய அரசின் கஜானாவுக்கு வந்த ரூ.10.71 லட்சம் கோடி

2020-21 நிதியாண்டில் மத்திய அரசின் மறைமுக வரி வசூல் ரூ.10.71 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும். ஜி.எஸ்.டி., கலால் வரி போன்றவை மறைமுக வரிகளாகும். மறைமுக வரி அரசால் ஒருவர் மீது விதிக்கப்பட்டாலும் அதனை தாங்குபவர் வேறு ஒருவராக இருப்பார். அதேசமயம் நேரடி வரிகளை மற்றவர் மீது சுமத்த முடியாது.

கொரோனா காலத்திலும் மறைமுக வரி வசூல் அமோகம்… மத்திய அரசின் கஜானாவுக்கு வந்த ரூ.10.71 லட்சம் கோடி
மறைமுக வரி

2020-21 நிதியாண்டில் (2020 ஏப்ரல்-2021 மார்ச்) மத்திய அரசின் மறைமுக வரி (சுங்க, கலால், ஜி.எஸ்.டி.) வசூல் ரூ.10.71 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2019-20ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு மறைமுக வரிகள் வாயிலாக ரூ9.54 லட்சம் கோடி மட்டுமே கிடைத்தது. ஆக. கடந்த நிதியாண்டில் மத்திய அரசின் மறைமுக வரி வசூல் 12.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

கொரோனா காலத்திலும் மறைமுக வரி வசூல் அமோகம்… மத்திய அரசின் கஜானாவுக்கு வந்த ரூ.10.71 லட்சம் கோடி
ஜி.எஸ்.டி.

கடந்த நிதியாண்டில் நிகர சுங்க வரி வசூல் 21 சதவீதம் அதிகரித்து ரூ.1.32 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நிகர கலால் மற்றும் சேவை வரி (நிலுவை) வசூல் 59 சதவீதம் உயர்ந்து ரூ.3.91 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் நிகர மத்திய ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.5.48 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் லாக்டவுனால் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இருப்பினும் மத்திய அரசின் மறைமுக வரி வசூல் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.