இண்டிகோ நிறுவனத்தின் மதுரை – டெல்லி இடையிலான விமான சேவை இன்று முதல் தொடக்கம்!

 

இண்டிகோ நிறுவனத்தின் மதுரை – டெல்லி இடையிலான விமான சேவை இன்று முதல் தொடக்கம்!

இண்டிகோ நிறுவனத்தின் மதுரை – டெல்லி இடையிலான விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கபட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் கடந்த மே இறுதியில் இருந்து உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு நாள்தோறும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை – டெல்லிக்கு வாரத்திற்கு மூன்று சேவைகளை ஏர்இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது இண்டிக்கோ விமான நிறுவனம் மதுரை – டெல்லிக்கு வாரத்திற்கு 4 விமானங்கள் வீதம் 8 சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இண்டிகோ நிறுவனத்தின் மதுரை – டெல்லி இடையிலான விமான சேவை இன்று முதல் தொடக்கம்!F

அதாவது திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் விமான சேவை வழங்கப்பட உள்ளது. அதன்படி இண்டிக்கோ நிறுவனத்தின் மதுரை – டெல்லி இடையேயான முதல் விமான சேவை இன்று பகல் 2.45 மணிக்கு டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையத்திருக்கு வருகை தந்து, பின்னர் இன்று பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு செல்ல உள்ளது.