10 சதவிகித ஊழியர்கள் நீக்கம்… இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு!

 

10 சதவிகித ஊழியர்கள் நீக்கம்… இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களுள் ஒன்றான ஏர் இந்தியா தன்னுடைய ஊழியர்களில் 10 சதவிகிதம் பேரை நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

10 சதவிகித ஊழியர்கள் நீக்கம்… இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு!கொரோனா பாதிப்பு காரணமாக நிறுவனம் மிகப்பெரிய வருவாய் இழப்பை சந்தித்துள்ளது என்றும், இந்த இழப்பை ஈடுகட்ட 10 சதவிகித பணியாளர்களை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ தலைமை செயல் அலுவலர் ரோனோஜாய் தத்தா தெரிவித்துள்ளார்.

10 சதவிகித ஊழியர்கள் நீக்கம்… இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு!இது குறித்து அவர் கூறுகையில், இண்டிகோ வரலாற்றில் முதன் முறையாக இது போன்ற ஒரு மிகக் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடிய முடிவை எடுத்துள்ளோம். கடந்த ஆறு மாதங்களில் நிறுனத்தின் வளர்ச்சி வரைபடத்தில் மிகப்பெரிய இறக்கம் ஏற்பட்டதன் அடிப்படையில் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சில கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த தொழிலில் நீடிக்க முடியாது என்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

10 சதவிகித ஊழியர்கள் நீக்கம்… இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு!கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்ட்ரா, ஸ்பைஸ்ஜெட், கோ ஏர் என அனைத்து விமான நிறுவனங்களும் மிகக் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்தன. ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு, கட்டாய விடுப்பு என்று பல்வேறு நடவடிக்கை எடுத்த நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற நிலையில் வேலை நீக்கம் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன