சம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்!

 

சம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்!

வரும் கோடைக் காலத்தில் வெளியூர் செல்ல பிளான் போடுகின்றீர்களா… உங்களுக்காகவே மிகக் குறைந்த கட்டண டிக்கெட்டை போட்டிப் போட்டு அறிவித்துள்ளன இன்டிகோஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட்.

இன்டிகோ நிறுவனம் குறைந்த கட்டணம் ரூ.877ல் இருந்து தொடங்கும் என்று அறிவித்துள்ளது. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய இந்த திட்டம் வருகிற 17ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான காலத்துக்கு இப்போதே டிக்கெட் புக் செய்துகொள்ளலாம்.

சம்மர் டூர் பிளான் செய்ய நல்ல வாய்ப்பு… குறைந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட விமான நிறுவனங்கள்!

சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒருவருக்கு ரூ.877, ஹைதராபாத்துக்கு 1077, மும்பைக்கு 1528, கோவாவுக்கு ரூ.1728 ஆகிறது. ரயிலில் 3ம் நிலை ஏசி கட்டணத்தை விடக் குறைவாகவே வருகிறது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் கட்டணம் ரூ.899ல் இருந்து தொடங்குகிறது. அதிலும் வருகிற 17ம் தேதி வரை டிக்கெட் புக் செய்துகொள்ளலாம். பயண காலம் ஏப்ரல் 1 தொடங்கி செப்டம்பர் 30 வரை. கணவன், மனைவி, ஒரு குழந்தை உள்ள குடும்பத்தினர் டெல்லிக்கு வெறும் 7300ல் சென்றுவிடலாம்.

டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை போன்ற அதிக விமானங்கள் இயக்கப்படும் இடத்துக்கு சென்றால் கட்டணம் குறைவாக இருக்கும். ஒரு நாளைக்கு ஒன்று இரண்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் மதுரை, போர்ட் பிளேயர் போன்ற இடங்களுக்கு செல்வதாக இருந்தால் கட்டணம் அதிகமாகவே இருக்கும்.

எனவே, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையலான காலகட்டத்தில் சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள் இந்த விமான நிறுவனங்களின் இணையதளம் அல்லது ஆப்புக்கு சென்று டிக்கெட் கட்டணத்தை அறிந்து அதன் அடிப்படையில் திட்டமிடுவது நல்லது. வாய்ப்பு இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளது என்பதால் விரைவாக திட்டமிடுங்கள்.