விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 10 சதவீதம்.. மீதி தொகையை 15 நாட்களில் செலுத்தலாம்…இண்டிகோ அதிரடி

விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 10 சதவீதம்.. மீதி தொகையை 15 நாட்களில் செலுத்தலாம்…இண்டிகோ அதிரடி

கொரோனா வைரஸ் லாக்டவுனால் சுமார் 2 மாதங்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து விமான நிறுவனங்கள் மீண்டும் தங்களது விமானங்களை இயக்க தொடங்கின.

விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 10 சதவீதம்.. மீதி தொகையை 15 நாட்களில் செலுத்தலாம்…இண்டிகோ அதிரடி

தொற்று நோய் பரவல் அச்சம் காரணமாக உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை சுமாராகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் இண்டிகோ நிறுவனம் விமான பயணிகளை ஈர்க்கும் வகையில், உள்நாட்டு பயண முன்பதிவுக்கு பிளக்ஸ் பே திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் 10 சதவீதம் பணம் செலுத்தினால் போதும், பாக்கி தொகையை முன்பதிவு செய்த நாளிலிருந்து அல்லது பயண தேதிக்கு முந்தைய 15 தினங்களுக்குள் செலுத்த வேண்டும்.

விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது 10 சதவீதம்.. மீதி தொகையை 15 நாட்களில் செலுத்தலாம்…இண்டிகோ அதிரடி

இது தொடர்பாக இண்டிகோ வெப்சைட், பிளக்ஸ் பே திட்டத்தின்கீழ், பயணிகள் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது மொத்த கட்டண தொகையில் 10 சதவீதம் மட்டுமே குறைந்தபட்சம் ரூ.400 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்த டிக்கெட்டுகள் பிளக்ஸ் ஹோல்டில் வைக்கப்படும். பாக்கி தொகை செலுத்திய பிறகு அந்த டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படும் என தெரிவித்தது.