கொரோனா 2வது அலை எதிரொலி.. ரூ.1,147 கோடி நஷ்டத்தை சந்தித்த இண்டிகோ நிறுவனம்

 

கொரோனா 2வது அலை எதிரொலி.. ரூ.1,147 கோடி நஷ்டத்தை சந்தித்த இண்டிகோ நிறுவனம்

கொரோனா வைரஸின் 2வது அலை காரணமாக இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ரூ.1,147 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது.

விமான சேவையில் ஈடுபட்டு வரும் இன்டர்குளோப் ஏவியேஷன் (இண்டிகோ) நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ரூ.1,147 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்துக்கு ரூ.871 கோடி மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

கொரோனா 2வது அலை எதிரொலி.. ரூ.1,147 கோடி நஷ்டத்தை சந்தித்த இண்டிகோ நிறுவனம்
இண்டிகோ

2021 மார்ச் காலாண்டில் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் வருவாயாக ரூ.6,223 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 25 சதவீதம் குறைவாகும். 2021 மார்ச் 1ம் தேதி நிலவரப்படி, இண்டிகோ நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு ரூ.18,569 கோடியாகவும், மொத்த கடன் ரூ.29,860 கோடியாகவும் உள்ளது.

கொரோனா 2வது அலை எதிரொலி.. ரூ.1,147 கோடி நஷ்டத்தை சந்தித்த இண்டிகோ நிறுவனம்
இண்டிகோ

2020-21ம் நிதியாண்டில் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் ரூ.5,806 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. 2019-20ம் நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.233 கோடி ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்த போது இண்டிகோ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.05 சதவீதம் அதிகரித்து ரூ.1,753.60 ஆக குறைந்தது.