போதிய பயணிகள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன விமானங்கள் ரத்து!

 

போதிய பயணிகள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன விமானங்கள் ரத்து!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று காலை இந்தியா முழுவதும் பல விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கின. ஆனால் அதிக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டெல்லி, மும்பை ஆகிய விமான நிலையங்களில் பயணிகள் இடையே குழப்பம் ஏற்பட்டது. விமான சேவை ரத்து தொடர்பாக விமான நிறுவனங்கள் தங்களுக்கு எந்த அறிவிப்பும் தரவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.

போதிய பயணிகள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவன விமானங்கள் ரத்து!

இந்நிலையில் கடந்த 61 நாட்களுக்கு பின் இன்று உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட்டதை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் இண்டிக்கோ மற்றும் ஸ்ப்ய்ஸ்ஜெட் விமானங்கள் தனது சேவையை இன்று தொடங்கின. இந்நிலையில், நாளை இண்டிக்கோ விமான நிறுவனம் போதிய பயணிகள் வரத்து இல்லாததையடுத்து தனது சேவையை முழுவதுமாக ரத்து செய்துள்ளது. தொடர்ந்து ஸ்பெய்ஸ் ஜெட் நிறுவனம் மட்டும் மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை , பெங்களூர், டெல்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு சேவையை மேற்கொள்ள உள்ளது.