அதிகரித்த சில்லரை விலை பணவீக்கம்.. ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்புகள் குறைகிறது..

 

அதிகரித்த சில்லரை விலை பணவீக்கம்.. ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்புகள் குறைகிறது..

கடந்த மே மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 6.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது.

கடந்த மே மாத சில்லரை விலை பணவீக்கம் மற்றும் மொத்த விலை பணவீக்கம் குறித்து புள்ளிவிவரத்தை நேற்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டது. கடந்த மே மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 6.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 4.23 சதவீதமாக (மறுமதிப்பீடு) இருந்தது. கடந்த 6 மாதங்களில் முதல் முறையாக கடந்த மே மாதத்தில்தான் சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்த சில்லரை விலை பணவீக்கம்.. ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்புகள் குறைகிறது..
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம்

இந்திய ரிசர்வ் வங்கி, முக்கிய கடன்களுக்கான (ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ ரேட்) வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் போது நடப்பில் உள்ள சில்லரை விலை பணவீக்க நிலவரத்தை மனதில் கொண்டே முடிவு செய்யும். சில்லரை விலை பணவீக்கம் கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் அதிகரித்தால் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தற்போது சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளதால் எதிர்வரும் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.

அதிகரித்த சில்லரை விலை பணவீக்கம்.. ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்புகள் குறைகிறது..
பணவீக்கம்

கடந் மாதத்தில் உணவு மற்றும் எரிபொருட்கள் விலை அதிகமாக இருந்ததே சில்லரை விலை பணவீக்கம் அதிகரிப்புக்கு முக்கிய காரணம். கடந்த மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு 12.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம்10.49 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து 5வது மாதமாக கடந்த மே மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது.