சில்லரை விலை பணவீக்கம் அதிகரிப்பு.. தொழில்துறை உற்பத்தியில் வீழ்ச்சி.. மத்திய அரசுக்கு நெருக்கடி

 

சில்லரை விலை பணவீக்கம் அதிகரிப்பு.. தொழில்துறை உற்பத்தியில் வீழ்ச்சி.. மத்திய அரசுக்கு நெருக்கடி

கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்து இருப்பது, கடந்த பிப்ரவரியில் தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி கண்டு இருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சில்லரை விலை பணவீக்கம் 4 சதவீதத்துக்குள் வைத்திருக்க இந்திய ரிசர்வ் வங்கியை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் அந்த கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் 2 சதவீதம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். சில்லரை விலை பணவீக்கம் கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் அதிகரித்தால் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

சில்லரை விலை பணவீக்கம் அதிகரிப்பு.. தொழில்துறை உற்பத்தியில் வீழ்ச்சி.. மத்திய அரசுக்கு நெருக்கடி
இந்திய ரிசர்வ் வங்கி

கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் மற்றும் கடந்த பிப்ரவரி மாத தொழில்துறை உற்பத்தி குறித்து புள்ளிவிவரத்தை நேற்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டது. கடந்த மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.52 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 5.03 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து 4வது மாதங்களாக சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சில்லரை விலை பணவீக்கம் அதிகரிப்பு.. தொழில்துறை உற்பத்தியில் வீழ்ச்சி.. மத்திய அரசுக்கு நெருக்கடி
தொழில்துறை

கடந்த பிப்ரவரி மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 3.6 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. 2021 ஜனவரி மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 1.6 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டு இருந்தது. 2020 பிப்ரவரி மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4.5 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீண்டும் வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி கண்டு இருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.