5 ஆண்டுகளாக பொருளாதாரம் சீர்குலைவு… இந்த ஆண்டு மைனஸ் 9 வரை வீழ்ச்சி அடையும்! – சுப்பிரமணியன் சுவாமி கணிப்பு

5 ஆண்டுகளாக பொருளாதாரம் சீர்குலைவு… இந்த ஆண்டு மைனஸ் 9 வரை வீழ்ச்சி அடையும்! – சுப்பிரமணியன் சுவாமி கணிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி மைனஸ் ஆறு முதல் ஒன்பது சதவிகிதம் வரை வீழ்ச்சியை சந்திக்கும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளாக பொருளாதாரம் சீர்குலைவு… இந்த ஆண்டு மைனஸ் 9 வரை வீழ்ச்சி அடையும்! – சுப்பிரமணியன் சுவாமி கணிப்பு
இந்திய – அமெரிக்க வர்த்தக சபை சார்பில் காணொலி கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க எம்.பி சுப்பிரமணியன்சுவாமி பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது, “இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் அது மைனஸ் 6 முதல் 9 சதவிகிதம் வீழ்ச்சியடையும். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது.
எல்லா பொருட்களையும் உற்பத்தி செய்யும் திறமை இந்தியாவிடம் உள்ளது.

5 ஆண்டுகளாக பொருளாதாரம் சீர்குலைவு… இந்த ஆண்டு மைனஸ் 9 வரை வீழ்ச்சி அடையும்! – சுப்பிரமணியன் சுவாமி கணிப்பு

எது லாபமானதோ அதை உற்பத்தி செய்து விற்க முடியுமா என்பதுதான் கேள்வியாக உள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 7 சதவிகிதம் என்ற அளவுக்கு கொண்டுவர முடியும். அதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பொருளாதார கொள்ககைகளை செயல்படுத்தக் கூடாது” என்றார்.