பொருளாதார வளர்ச்சியில் 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு…. மோடியின் 5 லட்சம் கோடி பொருளாதார கனவு கனவாகி விடுமா?

பொருளாதார வளர்ச்சியில் 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு…. மோடியின் 5 லட்சம் கோடி பொருளாதார கனவு கனவாகி விடுமா?

மத்திய புள்ளியியல் அலுவலகம் கடந்த மார்ச் காலண்டு மற்றும் 2019-20ம் நிதியாண்டின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2019-20ம் நிதியாண்டில் நாட்டின பொருளாதார வளர்ச்சி 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.2 சதவீதமாக குறைந்துள்ளது. அந்த நிதியாண்டில் பொருளாதாரத்தில் 5 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதனை காட்டிலும குறைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு…. மோடியின் 5 லட்சம் கோடி பொருளாதார கனவு கனவாகி விடுமா?

2020 மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 40 காலண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகளில் பின்னடைவு மற்றும் கடந்த மார்ச் இறுதியில் அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய லாக்டவுனின் சில பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் அந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சி கண்டது. விவசாய துறை மற்றும் அரசின் செலவிடல் மட்டுமே அந்த காலாண்டில் நிலையாக இருந்தது

பொருளாதார வளர்ச்சியில் 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு…. மோடியின் 5 லட்சம் கோடி பொருளாதார கனவு கனவாகி விடுமா?

பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தை பற்றி பேசினாலே, 2024ம் ஆண்டுக்குள் இந்தியா 5 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டும் என அடிக்கடி கூறிவந்தார். ஆனால் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் குறைந்தபட்சம் 8 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி ஏற்பட வேண்டும். ஆனால் தற்போதைய வளர்ச்சி பார்த்தால் 5 லட்சம் கோடி பொருளாதார பலத்தை நிர்ணயித்த காலத்துக்குள் எட்டுவது சாத்தியமில்லை, அதனை காட்டிலும் மேலும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருக்கும் போல் தெரிகிறது.