40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி!

 

40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி!

2020-21 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.3 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி!

கொரோனா தொற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி – மார்ச் 2021-இல் ஜிடிபி 1.6 சதவிகிதம் வளர்ச்சியடைந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 1980-81 க்குப் பிறகு முதன்முறையாக மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. 40 ஆண்டுகளில் நாட்டின் ஜிடிபியில் இது மோசமான வீழ்ச்சி என்று அரசு வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனாவின் இரண்டாம் அலையால் பொருளாதார தாக்கம் மிகப் பெரியதாக இருக்க வாய்ப்பில்லை என்று கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்தார். தொற்றுநோய் நெருக்கடியின் போது முட்டாள்தனமான பொருளாதாரக் கொள்கைகள் மில்லியன் கணக்கான இந்தியர்களை வறுமைப் பொறிக்குள் தள்ளியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.