முதல் முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு கண்ட இந்திய பொருளாதாரம்… 23.9 சதவீதம் வீழ்ச்சி

முதல் முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு கண்ட இந்திய பொருளாதாரம்… 23.9 சதவீதம் வீழ்ச்சி

நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஜூன் காலாண்டில் இல்லாத அளவுக்கு 23.9 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2018-19ம் நிதியாண்டு முதல் சரிவு கண்டு வருகிறது. சென்ற 2019-20ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.2 சதவீதமாக குறைந்தது. சரி இந்த நிதியாண்டிலாவது பொருளாதாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்த்தால் கொரோனா வைரஸ் ரூபத்தில் மிகப்பெரிய வேகத்தடை விழுந்துள்ளது.

முதல் முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு கண்ட இந்திய பொருளாதாரம்… 23.9 சதவீதம் வீழ்ச்சி
மொத்த உள்நாட்டு உற்பத்தி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. இந்த லாக்டவுனால் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் நடுப்பகுதி வரை மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். அத்தியாவசிய சேவைகள், கடைகள் தவிர வேறு எதுவும் இயங்கவில்லை. இதனால் அந்த காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கும் என நிபுணர்கள் கணித்து இருந்தனர். இந்நிலையில் புள்ளியியல் அலுவலகம் நேற்று கடந்த ஜூன் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டது.

முதல் முறையாக இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு கண்ட இந்திய பொருளாதாரம்… 23.9 சதவீதம் வீழ்ச்சி
பொருளாதார நடவடிக்கைகளை முடக்கிய லாக்டவுன்

கடந்த ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. மத்திய அரசு 1996ம் ஆண்டு முதல் காலாண்டு புள்ளிவிவரங்களை வெளியிட தொடங்கியதிலிருந்து இது பொருளாதாரத்தின் மிகப் பெரிய கடுமையான சரிவாகும். ஜி20 நாடுகளில் இது மோசமானதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கு முன் இங்கிலாந்து கடந்த காலாண்டில் பொருளாதாரத்தில் 21.7 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்து இருந்தது.