இந்திய விமானப்படையின் முதல் பெண் கமாண்டர் காலமானார்!

 

இந்திய விமானப்படையின் முதல் பெண் கமாண்டர் காலமானார்!

இந்திய விமானப்படையின் முதல் பெண் கமாண்டர் விஜயலட்சுமி ரமணன் காலமானார். அவருக்கு வயது 96.

இந்திய விமானப்படையின் முதல் பெண் கமாண்டர் காலமானார்!

1924ஆம் ஆண்டு பிறந்த விஜயலட்சுமி ரமணன் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார். பின்னர் 1955ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் தன்னை இணைத்து கொண்டார். பின்னர் விமானப்படை பணி தொடர்பாக பெங்களூரு, கான்பூர், செகந்திராபாத் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி உள்ளார். 1972 இல் விங் கமாண்டராக ஆனார். 1979 பிப்ரவரி 28 அன்று ஓய்வுபெற்ற அவர் இந்திய விமானப்படையில் 24 ஆண்டுகள் பணியாற்றினார். இவருக்கு 1977 ஆம் ஆண்டில் விசித் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. பின்னர் கணவர் ரமணனுடன் பெங்களூருவில் வசித்து வந்தார் விஜயலட்சுமி.

இந்திய விமானப்படையின் முதல் பெண் கமாண்டர் காலமானார்!

இந்நிலையில் விஜயலட்சுமி ரமணன் உடல்நல குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 18 ஆம் தேதி உயிரிழந்தார். இந்திய- சீனா போர், பாகிஸ்தானுடனான இரண்டு போர்களில் விஜயலட்சுமி பங்கேற்றது நினைவுகூறத்தக்கது.