கலைக்கூடமாக மாறும் கர்நாடகா! பொம்மை தயாரிப்பு மண்டலத்துக்கு அடிக்கல்…

 

கலைக்கூடமாக மாறும் கர்நாடகா! பொம்மை தயாரிப்பு மண்டலத்துக்கு அடிக்கல்…

இந்தியாவில் முதல் முறையாகப் பொம்மை உற்பத்திக்கெனப் பிரத்தியேக பொம்மை தயாரிப்பு மண்டலம் கர்நாடக மாநிலத்தில் தொடங்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா கலந்துகொண்டார். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்து, உற்பத்தி பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்சாலை பிரதமர் மோடியால் திறக்கப்படும் என எடியூரப்பா கூறினார்.

கர்நாடக அரசுடன் இணைந்து Aequs SEZ Pvt Ltd என்ற நிறுவனம் இந்த பொம்மை தொழிற்சாலையை உருவாக்குகிறது. 100க்கும் மேற்பட்ட அலகுகளில் பொம்மை தயாரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் சுமார் 30 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் ஒரு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக எடியூரப்பா தெரிவித்தார்.

கலைக்கூடமாக மாறும் கர்நாடகா! பொம்மை தயாரிப்பு மண்டலத்துக்கு அடிக்கல்…

கோபால் மாவட்டம் பனாபூர் கிராமத்தில் நாட்டிலேயே முதல் பொம்மை உற்பத்தி தளம் உருவாக்கப்படுகிறது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள இந்த இத்திட்டத்திற்காகச் சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பிரமாண்ட உள்கட்டுமான அமைப்புடன் தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் உள்ளூர்களுக்கு மட்டுமல்லாது, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு அதிநவீன முறையிலும் உயர் தரத்திலும் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 450 மில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீடுகள் இந்த தொழிற்சாலைக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தொழில்துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டார் தெரிவித்த்தார்.

இந்த தொழிற்சாலையில் பொம்மை தயாரித்தல் மற்றும் மோல்டிங், அசெம்பிளி, பெயிண்டிங், பேக்கேஜிங், சோதனை மற்றும் கிடங்கு மேலாண்மை ஆகியவை அமையவுள்ளது. இங்குள்ள பணிபுரிய பெண்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் இந்த தொழிற்சாலை வந்தவுடன் ஒரு நாளைக்கு ரூ .200 சம்பாதிக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு ரூ .600 சம்பாதிக்க முடியும் என்றும் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 1 பில்லியன் டாலர் அளவிற்கு பொம்மைகள் விற்பனையாகிறது. இதில் 60% பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுபவையாகும்