Home அரசியல் 5 தொகுதிகளை கேட்டோம்; 3 தான் கொடுத்தார்கள்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி

5 தொகுதிகளை கேட்டோம்; 3 தான் கொடுத்தார்கள்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இந்திய முஸ்லீம் லீக் சார்பாக 6 நிர்வாகிகள் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் முன்னிலையில் திமுக – ஐ.யூ.எம்.எல். நிர்வாகிகள் மற்றும் மமக நிர்வாகிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

உணவு உண்ணும் அளவுக்கு ஜெ.வின் உடல் நிலை தேறிவிட்டது : காதர் மொய்தீன் பேட்டி

இதுகுறித்து கருத்து தெரிவித்த முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், “திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.5 தொகுதிகளை கேட்டோம் – சூழ்நிலையை கருதி 3 தொகுதிகளுக்கு சம்மதித்தோம். எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும். ஐ.யூ.எம்.எல். ஏணி சின்னத்தில் தான்
போட்டியிடுகிறோம்.எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்தார்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews