“இந்தியாவில் படிப்போம் ,அமெரிக்காவுக்கு உழைப்போம்” -க்ரீன் கார்டு வாங்க 200 ஆண்டுகளுக்கு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் இந்தியர்கள் .

“இந்தியாவில் படிப்போம் ,அமெரிக்காவுக்கு உழைப்போம்” -க்ரீன் கார்டு வாங்க 200 ஆண்டுகளுக்கு  வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் இந்தியர்கள் .

இந்தியாவில் படிக்கும்போதே அமெரிக்காவில் போய் வேலை செய்ய விரும்பும் மாணவர்கள் தான் இங்கு அதிகம் .இப்போது அமெரிக்காவில் கொரானா வந்தாலும் யாரும் அங்கிருந்து திரும்பி வர விரும்பவில்லையாம் .அதனால் அங்கு க்ரீன் கார்டு கேட்டு காத்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதாம்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் க்ரீன் கார்டு வழங்க 200 ஆண்டுகள் பிடிக்குமென அந்த நாட்டு சட்டமன்ற உறுப்பினர் டார்பின் அந்த நாட்டு செனட் சபை கூட்டத்தில் தெரிவித்தார் .

“இந்தியாவில் படிப்போம் ,அமெரிக்காவுக்கு உழைப்போம்” -க்ரீன் கார்டு வாங்க 200 ஆண்டுகளுக்கு  வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் இந்தியர்கள் .
அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வெளிநாட்டு பிரஜைகள் வேலை வாய்ப்பு விசாவில் இருக்கிறர்கள் .அவர்கள் அனைவருமே க்ரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர் .இதில் பெரும்பாலானோர் இந்தியர்களாம் .
ஒரு வருடத்திற்கு 140000 பேர் அமெரிக்காவுக்கு வேலை வாய்ப்பு விசாக்கள் வாங்குகிறார்கள் ,அப்படி வந்தவர்கள் யாரும் திரும்பி தங்களின் தாய் நாட்டுக்கு போக விரும்பாமல் அமெரிக்காவிலே இடம் பெயர்ந்து குடும்பத்தோடு வாழ விரும்புகிறார்களாம். அவர்கள் அனைவருமே அமெரிக்காவை மிகவும் நேசிக்கிறார்கள் என அந்த செனட் சபை உறுப்பினர் கூறினார்
குடியரசு கட்சியின் ஒரு உறுப்பினர் ஒரு நாட்டிற்கு ஏழு சதவீதம் பேருக்கு மட்டுமே க்ரீன் கார்டு வழங்க வேண்டுமென கூறியதற்கு,பல உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அது அமெரிக்காவின் பன்முக தன்மையினை பாதிக்குமென்று கூறினார்கள் .

“இந்தியாவில் படிப்போம் ,அமெரிக்காவுக்கு உழைப்போம்” -க்ரீன் கார்டு வாங்க 200 ஆண்டுகளுக்கு  வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் இந்தியர்கள் .