• April
    07
    Tuesday

Main Area

Main



அமெரிக்காவில் இந்தியர் மீது துப்பாக்கிசூடு!  

representative image
representative image

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சனிக்கிழமை அன்று இந்தியர் ஒருவர் அடையாளம்  தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளி பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

இறந்தவர் ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அந்த தகவல்களின்படி, ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான மனிந்தர் சிங் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் உள்ள விட்டியர் நகரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இறந்தவரின் உறவினர்கள் அளித்த தகவல்களின்படி, அவரது வருமானத்தில்  தான் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பிழைத்து வந்தனர். இறந்தவர் ஆறு மாதங்களுக்கு முன்பு தான் அமெரிக்கா சென்றுள்ளார். தனது வருமானத்தில் பெரும் பகுதியை குடும்பத்திற்கு அனுப்பி  வந்துள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 5.43 மணிக்கு நடந்திருப்பதாக விட்டியர் நகர காவல்துறை தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமாக நபர்  ஒருவர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் கடைக்குள்  நுழைந்துள்ளார். அப்போது அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது, பின்பு இந்தியரை சுட்டுவிட்டு  அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார் விரைவில் கைது செய்யப்படுவான் என்று கூறியுள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.