• March
    28
    Saturday

Main Area

Main



மலேசிய பாமாயில் இறக்குமதிக்கு தடை! உள்நாட்டில் விலை உயரும் அபாயம்....

பாமாயில்
பாமாயில்

சர்வதேச அளவில் பாமாயில் இறக்குமதியில் நம் நாடு முன்னணியில் உள்ளது. குறிப்பாக மலேசியாவிலிருந்து நம் நாடு அதிகளவில் பாமாயில் இறக்குமதி செய்கிறது. இந்தியாவுக்கு பாமாயில் ஏற்றுமதி செய்வதன் வாயிலாக பெரிய வருவாய் மலேசிய அரசுக்கு கிடைத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, இந்தியா தனது மதச்சார்பற்ற அஸ்திரவாரங்களிலிருந்து விலகுகிறது மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட பயன்படுத்தப்படுகிறது என மலேசிய பிரதமர் மகாதிர் முகமது  சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு நம்நாட்டின் வெளியுறவுத்துறை சரியான பதிலடி கொடுத்தது.

மகாதிர் முகமது

மேலும், மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அடி கொடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில் கடந்த வாரம் தாவர எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்திய அரசை சந்தித்து பேசினர். அப்போது மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை தவிர்க்கும்படி அதிகாரப்பூர்வமற்ற வகையில் அவர்களிடம் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. இதனையடுத்து நம்நாட்டு பாமாயில் இறக்குமதியாளர்கள் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்தி விட்டனர்.

பாமாயில்

அதேசமயம், மலேசியாவுக்கு மாற்றாக இந்தோனேஷியாவிலிருந்து அதிக விலை கொடுத்து பாமாயிலை இந்திய வர்த்தகர்கள் இறக்குமதி செய்து வருகின்றனர். ஒரு டன் மலேசியா பாமாயில் 800 டாலராக உள்ளது. ஆனால் இந்தோனேஷியாவிலிருந்து ஒரு டன் 810 டாலர் என்ற விலையில் பாமாயிலை இறக்குமதி செய்து வருவதாக பெயர் வெளியிட விரும்பாத வர்த்தகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விலை அதிகம் கொடுத்து தொடர்ந்து இறக்குமதி செய்தால் உள்நாட்டில் பாமாயில் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.