244 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி – – IndVsAus டெஸ்ட் Updates

 

244 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி – – IndVsAus டெஸ்ட் Updates

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ப்ரித்தீவ் ஷாவும் மயங் அகர்வாலும் இறங்கினார்கள். ப்ரித்தீவ் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க்கிடம் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார்.

244 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி – – IndVsAus டெஸ்ட் Updates

அடுத்து புஜாரா களம் இறங்கினார். மறுமுனையில் பந்துகளின் போக்குகளுக்கு ஏற்ப ஆடி வந்த மயங் 2 பவுண்ட்ரிகளை விளாசினார். 44 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார் மயங்.

அடுத்த பேட்ஸ்மேனாக வந்தார் கேப்டன் விராட் கோலி. புஜாரா 88 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெகு நிதானமாக ஆடினார். இடைவேளைக்குப் பிறகு வந்த புஜாரா, ரன் எடுப்பதை வேகப்படுத்தினார். குறிப்பாக லயன் பந்து வீச்சை அடிக்க பயன்படுத்திக்கொண்டார். ஆனால், அவரிடமே தம் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார். 160 பந்துகளைச் சந்தித்த புஜாரா 43 ரன்களை எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரிகள் அடங்கும்.

244 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி – – IndVsAus டெஸ்ட் Updates

விராட் கோலி தனது அரை சதத்தைக் கடந்தார். 130 பந்துகளில் 52 ரன்களை எடுத்திருந்தார். ரஹானே களம் இறங்கி 2 பவுண்டரிகளோடு 45 பந்துகளோடு 14 ரன்களை எடுத்து ஆடி வருகிறார்.

180 பந்துகளைச் சந்தித்து 74 ரன்களை விராட் கோலி எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் ரஹானே 42 ரன்களில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானார்.

அடுத்து நன்கு ஆடிக்கொண்டிருந்த விஹாரி 16 ரன்களோடு அவுட்டானர். அடுத்து அஸ்வின் களம் இறங்கியிருக்கிறார். நேற்றைய ஆட்ட முடிவில் 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. 11 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிக்கொடுத்தது.

244 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி – – IndVsAus டெஸ்ட் Updates

இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 74 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அடுத்து ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகியோர் ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கி ஆடி வருகின்றன. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார்.