Home விளையாட்டு கிரிக்கெட் 244 ரன்களில் சுருண்ட இந்திய அணி - தோல்வியை நோக்கிச் செல்கிறதா?

244 ரன்களில் சுருண்ட இந்திய அணி – தோல்வியை நோக்கிச் செல்கிறதா?

மூன்றாம் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களின் ஆட்டம் கவலை தரும் விதத்தில் இருக்கிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையேயான, ஒருநாள் போட்டித் தொடரை 2:1 எனும் கணக்கில் ஆஸ்திரேலியாவும், டி20 போட்டித் தொடரை 2:1 எனும் கணக்கில் இந்தியாவும் வென்றது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. 7-ம் தேதி தொடங்கிய மூன்றாம் டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் ஆஸ்திரேலியா அணி.

105.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் சதமடித்தார். அவரை அபாரமாக ரன் அவுட் ஆக்கினார் ரவிந்திர ஜடேஜா. இல்லையெனில் ஆஸ்திரேலிய ஸ்கோர் இன்னும் அதிகரித்திருக்கக் கூடும்.

அடுத்து ஆடிய இந்திய அணி தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. ஆம், அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா – கில் ஜோடி ஓப்பனிங் இறங்கியது. இவர்களில் ரோஹித் ஷர்மா 26 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டானார்.

கில் – புஜாரா ஜோடி நிலைத்து ஆடியது. இருவரும் தலா 50 ரன்கள் எடுத்தனர். அதற்கு அடுத்து வந்த வீரர்களில் பண்ட் தவிர 30 ரன்களைக்கூட தாண்ட வில்லை. மேலும் விரைவிலேயே ஆட்டமிழந்தனர். சென்ற டெஸ்ட் போட்டிகளில் நன்றாக ஆடிய ரஹானேவும் இந்த டெஸ்ட்டில் ஏமாற்றமே தந்தார். புஜாரா தாக்குப் பிடித்து அரை சதம் அடித்தது குறிப்பிட்டத்தக்கது.

ரஹானா 22, விஹாரி 4, ரிஷப் பண்ட் 36, அஷ்வின் 10, சைனி 3, பும்ரா 0, சிராஜ் 6 என்று வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தனர். மறுபுறம் ஜடேஜா 28 ரன்களோடு ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு இணையாக எதிர்முனையில் ஆட யாருமே இல்லாததால் இந்திய அணி 10 விக்கெட்டுகளை இழந்தி 244 ரன்களுக்குள் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவை விட 94 ரன்கள் குறைவாகவே எடுத்திருக்கிறது.

அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. வார்னர் – புகோவ்ஸ்கி ஜோடி ஓப்பனிங் இறங்கியது. முறையே 13, 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். லபுஷேன், ஸ்மித் ஜோடி ஆடி வருகிறது.

16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்தௌ 60 ரன்களை எடுத்திருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இதன்மூலம் வெற்றி வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கே அதிகம் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

மாதவிலக்கு காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஸ்மூத்தி!

பொதுவாக பழங்களை கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. சில சமயங்களில் சர்க்கரை சேர்க்காமல் பழங்களை அரைத்து ஸ்மூத்தி போன்று எடுத்துக்கொள்ளலாம். ஐந்து பழங்களை ஒன்று சேர்த்து ஸ்மூத்தி...

ஹார்ட் அட்டாக் தவிர்க்க இந்த 5 விஷயத்தில் அலர்ட் தேவை!

உலக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் தொற்றா நோய்களில் முதலிடத்தை வகிப்பது மாரடைப்பு. ஹார்ட் அட்டாக் காரணமாக திடீர் திடீர் என்று நெருக்கமானவர்கள் உயிரிழப்பது பற்றிய செய்தியைக் கேட்டாலும் கூட அதில்...

அதிமுகவுக்கு மேலும் ஒரு செய்தித்தொடர்பாளர் நியமனம்!

அதிமுகவின் செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார் பேராசிரியர் ச. கல்யாண சுந்தரம். இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்...

அமைச்சர் காமராஜூக்கு சீரியஸ்! மருத்துவமனைக்கு படையெடுத்த ஈபிஎஸ், ஓபிஎஸ்

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா நோய் தொற்றுக்காரணமாக கடந்த 5ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், தொடர்ந்து இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் சிகிச்சை்காக...
Do NOT follow this link or you will be banned from the site!